Malare Kurinji Malare Tamil Karaoke For Male Singers With Lyrics

Song : Malare Kurinji Malare, Movie : Dr Siva
Download the karaoke


பாடல்              :    மலரே குறிஞ்சி மலரே,

படம்                 :   DR சிவா,

வருடம்            :   1975 

இசை                :    MS விஸ்வநாதன்,

பாடியவர்கள்  :    KJ ஜேசுதாஸ் , S ஜானகி 



M   மலரே குறிஞ்சி மலரே .....
F    மலரே குறிஞ்சி மலரே....
M   தலைவன் சூட நீ மலர்ந்தாய் பிறந்த பயனை நீ அடைந்தாய் 
M   மலரே குறிஞ்சி மலரே...

F   யார் மடி சுமந்து தான் பிறந்தாலும் 
     தாய் மடி மறந்து தலைவனை சேரும் 
     பெண்ணென்னும் பிறப்பல்லவோ....
M  கொடி  அரும்பாக செடியினில் தோன்றி 
      கோவிலில் வாழும் தேவனைத் தேடும் 
      மலரே நீ பெண்ணல்லவோ ...
F   தலைவன் சூட நீ மலர்ந்தாய் 
     பிறந்த பயனை நீ அடைந்தாய் 
     மலரே குறிஞ்சி மலரே....

M  நாயகன் நிழலே நாயகி என்னும் 
     காவியம் சொல்லி கழுத்தினில் மின்னும் 
     மகளே உன் திருமாங்கல்யம்..
F   தாய் வழி சொந்தம் ஆயிரம் இருந்தும் 
     தலைவனின் அன்பில் விளைவது தானே 
     உறவென்னும் சாம்ராஜ்ஜியம் 
M  தலைவன் சூட நீ மலர்ந்தாய் பிறந்த பயனை நீ அடைந்தாய்   
     மலரே குறிஞ்சி மலரே....
F   பாடிடும் காற்றே பறவையின் இனமே 
     பனி மலைத் தொடரில் பாய்ந்திடும் நதியே 
     ஓடோடி வாருங்களேன் ..
M  பால் மனம் ஒன்று பூ மனம் ஒன்று 
      காதலில் இன்று கலந்தது கண்டு 
      நல்வாழ்த்து கூறுங்களேன் ...

     தலைவன் சூட நீ மலர்ந்தாய் 
     பிறந்த பயனை நீ அடைந்தாய் 
     மலரே குறிஞ்சி மலரே....
F   மலரே குறிஞ்சி மலரே....
M  மலரே குறிஞ்சி மலரே....