Nenje Nenje Nee Enge Tamil Karaoke For Male Singers

  Song : Nenje Nenje Nee Enge, Movie : Ayan

Listen

Download the karaoke
 
Singers : Harish Ragavendra , Malathy
Female Cover : Kalatmika.
 
நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே
தேக‌ம் இங்கே என் ஜீவ‌ன் எங்கே
என் ந‌தியே என் க‌ண் முன்னால் வ‌ற்றிப் போனாய்
வான் ம‌ழையாக‌ என்னை தேடி ம‌ண்ணில் வ‌ந்த்தாய்
என் தாக‌ங்க‌ள் தீர்க்காம‌ல் க‌ட‌லில்
ஏன் சேர்கிறாய்.
ம் நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே.
க‌ண்ணே என் க‌ண்ணே நான் உன்னைக் காணாம‌ல்
வானும் என் ம‌ண்ணும்
பொய்யாக‌ க‌ண்டேனே.
அன்பே பேர‌ன்பே நான் உன்னைச் சேராம‌ல்
ஆவி என் ஆவி நான் இற்றுப்  போனேனே
வெயில் கால‌ம் வ‌ந்தால்தான் நீரும் தேனாகும்
பிரிவொன்றை க‌ண்டால்தான் காத‌ல் ருசியாகும்.......
உன் பார்வை ப‌டும் தூர‌ம் என் வாழ்வின் உயிர் நீளும்
உன் மூச்சு ப‌டும் நேர‌ம் என் தேக‌ம் அன‌லாகும்
நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே
தேக‌ம் இங்கே என் ஜீவ‌ன் எங்கே

க‌ள்வா என் க‌ள்வா நீ காத‌ல் செய்யாம‌ல்
க‌ண்ணும் என் நெஞ்ஞும் என் பேச்சை கேட்காதே
காத‌ல் மெய் காத‌ல் அது ப‌ட்டு போகாதே
காற்றும் நம் பூமி ந‌மை விட்டு போகாதே
ஆகாய‌ம் இட‌ம் மாறி போனால் போக‌ட்டும்
ஆனால் நீ ம‌ன‌ம் மாறி போக‌ கூடாதே
ஏ ம‌ச்ச‌த் தாம‌ரையே
என் உச்ச‌த் தார‌கையே
க‌ட‌ல் ம‌ண்ணாய் போனாலும்
ந‌ம் காத‌ல் மாறாதே
நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே எ ..எ  என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே
தேக‌ம் இங்கே என் ஜீவ‌ன் எங்கே
என் ந‌தியே என் க‌ண் முன்னே வ‌ற்றிப் போனாய்
வான் ம‌ழையாக‌ எனை தேடி ம‌ண்ணில் வ‌ந்த்தாய்
உன் தாக‌ங்க‌ள் தீராம‌ல் ம‌ழையே
ஏன் வ‌ருகிறாய்

No comments: